/* */

குமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

மீன் பிடிக்கும் போது மின்னல் தாக்கியதில் குமரி மீனவர் பலியானார்.

HIGHLIGHTS

குமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் இனையம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் கட்டுமர படகில் அதே ஊரை சேர்ந்த 4 மீனவர்கள் இன்று காலை தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கரை பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியதில் படகின் ஓரம் இருந்து மீன்பிடித்து கொண்டிருந்த பெலன் (35) என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த மீனவரின் உடலை சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர் மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர், தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் இனையம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!