குமரியில் 4 ஆண்டுகளுக்கு பின் தொழில் வர்த்தக சங்க நிர்வாக தேர்தல்: பலத்த பாதுகாப்பு
மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தி நடைபெற்ற தேர்தலில் கனமழையிலும் வர்த்தகர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக பெரிய வர்த்தக நகரமாக உள்ள மார்த்தாண்டம் மாநகரம்.
இங்குள்ள வியாபாரிகளின் ஒருங்கிணைந்த சங்கமான மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வர்த்தக சங்க தேர்தல் நடைபெறவில்லை, இதையடுத்து வர்த்தக சங்க தேர்தல் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
சுமார் 1022 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் முன்னாள் தலைவர் அல் அமீன் தலைமையிலான 5 பேர் கொண்ட செயற்குழு 10 பேர் கொண்ட நிர்வாக குழு அணியும், துணை தலைவரான பயணம் சுந்தர்ராஜ் தலைமையிலான அணியும் தேர்தலில் போட்டியிடுகிறது.
இதனிடையே இன்று நடைபெற்ற தேர்தலில் கனமழையிலும் வர்த்தகர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தலையொட்டி மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடபட்டிருந்தது. நடைபெற்ற வர்த்தக சங்க தேர்தலின் வாக்குகள் இன்று இரவே எண்ணபட்டு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu