இரயில் நிலையத்தில் 19 கார்கள் உடைத்து திருட்டு: ஒருவர் கைது

திருவனந்தபுரம் ரயில் நிலையம்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் தம்பானூர் இரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வேலை நிமித்தமாக செல்பவர்கள் அவர்களது கார்களை இரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் கார் பார்க்கிங்கில் நிறுத்தி செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 19 சொகுசு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு காருக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போயிருந்துள்ளன.
இந்த திருட்டு நடந்த வேளையில் நல்ல மழை பெய்ததின் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பார்க்கிங் பகுதிகளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது அதில் ஒரு நபர் தலையில் தொப்பி தோளில் பேகுடன் அங்கு வந்து கார்களின் கண்ணாடிகளை பெரிய கற்களை கொண்டு இடித்து உடைத்து காருக்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளன.
இதனை கொண்டு இரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த ஆபிரகாம் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக நடத்தபட்ட விசாரணையில் மது போதையில் இது போன்று நடந்து கொண்டதாகவும் கார்களுக்குள் இருந்து விலை உயர்ந்த கண் கண்ணாடிகளை எடுத்து சென்றதாகவும் தெரிவித்து உள்ளான், அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu