பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம்.

பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம்.
X
தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கபட்டது.

இதனை தொடர்ந்து கேரளா எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 75 நாட்களாக பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் பக்தர்கள் வருகையால் பரபரப்பாக காணப்படுகிறது.

கேரளாவை ஒட்டி அமைந்துள்ள கோவில் என்பதாலும் பழைமை மற்றும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதாலும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

இந்நிலையில் அதிகாலை முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து முறையான முகக்கவசம் அணிந்து வருவதை கண்காணித்து கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசங்கள் அணிந்தபடி கோவிலை வலம் வந்து தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவில் வளாகத்தினுள் பணிவடை செய்யும் பூஜாரிகளும் முகக்கவசம் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.

Tags

Next Story
ai marketing future