மது வாங்க கள்ள நோட்டு அச்சடிப்பு - கேரளா வாலிபர் கைது.

மது வாங்க கள்ள நோட்டு அச்சடிப்பு - கேரளா வாலிபர் கைது.
X
குமரியில் கள்ள நோட்டு மூலம் மது வாங்கிய கேரளா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரியில் கள்ள நோட்டு மூலம் மது வாங்கிய கேரளா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக கேரள எல்லை பகுதியான ஊரம்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபானம் வாங்க வந்துள்ளார்.

அந்த நபர் கடையில் இருந்த ஊழியரிடம் 500 ருபாய் நோட்டை கொடுத்து மது பாட்டில் ஒன்றை கேட்டுள்ளார். ரூபாய் நோட்டை வாங்கிய ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அதனை சோதித்த கடை ஊழியர் அது கள்ள நோட்டு என்பதை தெரிந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த கடை ஊழியர் அவரை கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அங்கு போலீசார் அந்த நபர் உடுத்தியிருந்த ஆடையை சோதனை செய்த போது பேன்ட் பாக்கெட்டில் ஒரே வரிசை எண் கொண்ட 500 ருபாய் நோட்டுகள் 7 இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த பைஜு ( 32 ) என்பதும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது கொரோனா காரணமாக திரும்ப வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிய வந்தது.

இந்த போலி ருபாய் நோட்டுகளை பல கடைகளில் கொடுத்து சிறிய வகை பொருட்கள் வாங்கி மீதம் கிடைக்கும் சில்லறையை நல்ல நோட்டாக மாற்றி கொண்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து கொல்லங்கோடு போலீசார் பைஜுவை கைது செய்து அவர் வைத்திருந்த 3500 ருபாய் போலி நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!