குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஒழிய மஹா மிருத்யஞ்சய யாகம் நடைபெற்றது.
யாகம் (கோப்புபடம்)
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஒழியவும் அதற்காக நீண்ட நாட்களாக போராடி வரும் மருத்துவ துறையைச் சார்ந்தவர்களின் முயற்சி வெற்றி பெறவும் இறைவனை வேண்டி கன்னியாகுமரி மாவட்ட இந்து கூட்டமைப்பு சார்பில் குலசேகரம் தும்பகோடு அச்சாளீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் மஹா மிருத்யஞ்சய யாக வேள்வி கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும் இந்த யாக பூஜையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து கூட்டமைப்பை சேர்ந்த இருபதாயிரம் வீடுகளில் குடும்பத்தினர் ஒன்றிணைந்து திருவிளக்கு முன்பு எள் கொண்டு மிருத்யஞ்சய மந்திரம் ஜெபித்து கூட்டு பிரார்த்தனை பூஜையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 41 நாட்கள் கூட்டு பிரார்த்தனைக்கு பின்னர் பூஜைக்கு பயன்படுத்திய எள் சேகரிக்கப்பட்டு குலசேகரம் தும்பகோடு அச்சாளீஸ்வரர் கோயிலில் நடைபெறும் மகா மிருத்யஞ்சய வேள்வியில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளது, மன்னர் காலத்தில் நோய் தொற்று அகல நடத்தப்பட்டது போல் தற்போது கொரோனாவை எதிர்க்கவும் தொற்று பரவல் அகலவும் இந்த மகா மிருத்யஞ்சய வேள்வி பூஜை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu