குமரியின் குற்றாலம் - ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் ஆபத்து இல்லை.

குமரியின் குற்றாலம் - ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் ஆபத்து இல்லை.
X
திற்பரப்பு அருவி - ஆபத்தில்லாமல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.

தென் கிழக்கு அரபிகடலில் ஏற்பட்டுள்ள டவ்தே புயல் காரணத்தால் கடந்த நான்கு தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதே போன்று மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் கனமழை பெய்த காரணத்தால் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிபாறை , பெருஞ்சாணி , சிற்றார் போன்ற அணைகள் நீர்மட்டம் உயர்ந்தது.

இதில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணையின் நீர் மட்டம் 43.12 அடியை தாண்டியதால் அங்கிருந்து மணிக்கு 4245 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஏற்கனவே கொரோணா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வர தடை செய்யபட்டு உள்ள காரணத்தால் வெள்ளப்பெருக்கால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பேச்சிபாறை உபரி நீர் திறப்பு அதிகரித்தால் மேலும் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் அப்போது அங்குள்ள சிறுவர் நீச்சல் குளம், தடுப்பு வேலிகள் மற்றும் சிறுவர் பூங்கா போன்றன பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!