'மழை கொட்ட போகுதுங்கோ' கன்னியாகுமரிக்கு 'ரெட் அலெர்ட்'

மழை கொட்ட போகுதுங்கோ  கன்னியாகுமரிக்கு ரெட் அலெர்ட்
X
குமரியில்-

தென்கிழக்கு அரபிக்கடல் அதையொட்டி உள்ள லட்சத்தீவு, மால தீவு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் குமரிமாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும் விட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் கன மழை துவங்கியது நடு இரவு வரை நீடித்த கனமழையானது அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 280 மில்லிமீட்டர் குருந்தங்கோடு பகுதியில் 120.6 மில்லிமீட்டர் என பதிவாகி உள்ளது.

மழையால் மாவட்டத்தில் உள்ள வீராணமங்களம் ஆறு, தாமிரபரணி ஆறு, போன்றவற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள வயல்வெளிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

தொடர்ந்து மழை நீடித்தால் விவசாய பயிர்கள் அழுகும் நிலையும் உருவாகி உள்ளது, இதனிடையே மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாரை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபட்டு உள்ளனர்.

Tags

Next Story