கோவில் திருவிழாவில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்டு ரூ.2000 பரிசு பெற்ற இளைஞர்

கோவில் திருவிழாவில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்டு ரூ.2000 பரிசு பெற்ற இளைஞர்
X

குமரியில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி

குமரி கோவில் திருவிழாவில் நடைபெற்ற 2 கிலோ பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் வெற்றி பெற்று 2000 ரூபாய் பரிசு பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூலன்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக வெஜிடபிள் பிரியாணி போட்டி நடைபெற்றது, 2 கிலோ பிரியாணியை முதலில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 2000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் 14 ஆண்களும் ஒரு பெண்ணும் கலந்து கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 13 நிமிடத்தில் இரண்டு கிலோ வெஜிடபிள் பிரியாணியை வினு என்ற இளைஞர் சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். இரண்டாம் பரிசை பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த தனிஷ் என்பவர் தட்டி சென்றார், மூன்றாம் பரிசினை கட்டி மங்காடு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் பரிசினைப் பெற்றார்.

முதல் பரிசை பெட்ரா வினு கூறுகையில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் 43 புரோட்டா சாப்பிட்டு முதல் பரிசு வாங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அனைவரையும் ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த வெஜிடபிள் பிரியாணி சாப்பிடும் போட்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself