வங்கி ஏடிஎம் கண்ணாடி உடைப்பு - போதை இளைஞர் கைது

வங்கி ஏடிஎம் கண்ணாடி உடைப்பு - போதை இளைஞர் கைது
X

கண்ணாடி உடைத்த காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 

குமரியில், குடி போதையில் வங்கி ஏடிஎம் கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் உள்ள பெடரல் வங்கி கிளை அருகே, அதன் ஏடிஎம் சென்டர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, போதை இளைஞர் ஒருவர் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். அவர் வந்த வேகத்தில் ஏடிஎம் அறையின் கண்ணாடி கதவை பலமாக தள்ளியதில் அந்த சென்டரின் கண்ணாடி கதவு முழுவதுமாக நொறுங்கி உடைந்து விழுந்தது.

ஏடிஎம் வாட்ச்மேன் இதுகுறித்து கேட்டபோது, அவரிடம் தகாத வார்த்தைகள் பேசிய போதை இளைஞர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வாட்ச்மேன், தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது, போதையில் இருந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!