நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
X

நாகர் கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடை ஊழியரின் நடவடிக்கையை கண்டித்து கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள ஒழுகினசேரி நியாயவிலை கடையை காலை 11 மணிக்கு திறக்கும் கடை ஊழியர் 12.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு சென்று விடுவதாகவும் பின்னர் 3 மணி அளவில் கடைக்கு வரும் ஊழியர் 4.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு சென்று விடுவதாகவும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் அதனை கள்ளசந்தையில் விற்பனை செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நியாயவிலை கடை ஊழியர் பொதுமக்களையும் குறிப்பாக பெண்களை தரகுறைவாகவும், அருவறுக்க தக்க வார்த்தைகளால் பேசுவதாக கூறியும் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை மாற்ற வலியுறுத்தி ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது கடையை ஒழுங்காக திறக்காமல் பொதுமக்களை அவ மரியாதையுடன் பேசுவதோடு பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துவரும் கடை ஊழியரிடம் ரேஷன் பொருட்கள் கேட்டால் கைகட்டி வாய் பொத்தி பணிவன்புடன் கேட்டால் மட்டுமே பொருட்கள் கொடுக்கப்படும் என கூறுகிறார்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், உடனடியாக கடை ஊழியரை மாற்ற வேண்டும். மேலும் இது வரை நடைபெற்ற மோசடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா