குமரியில் விமரிசையாக நடந்த வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்வு
வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தைக்கு எழுத்தறிவிக்கப்பட்டது.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று, விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புதிய செயல்களை தொடங்கினால் அது பலமடங்காக பெருகும் என்பது, காலம் காலமாக இருந்து வரும் ஐதீகமாக உள்ளது. அதன்படி விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கினால் அந்த குழந்தைகள் கல்வி செல்வம் கொண்டவர்களாக வருவார்கள் என்பது நம்பிக்கை.
அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் பழைய அரண்மனையான பத்பநாபபுரம் அரண்மனையில் உள்ள கம்பர் புகழ் பாடிய தேவார கட்டு சரஸ்வதி அம்மன் கோவில், ஆதி பராசக்தி சித்தர் பீடம் கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்ற வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், அரிசியில் 'அ' எனும் அகர ஓம்கார எழுத்தை எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu