சூறைக்காற்றுடன் மழை : சாலையில் வேரோடு மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர், ஆட்டோ சேதம்
ஆட்டோ மீது டிரான்ஸ்பார்மர் விழுந்து கிடக்கும் காட்சி
குமரி மாவட்டம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறை காற்று வீசிய வேகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் பல வேரோடு சாய்ந்தும் கிளைகள் முறிந்தும் விழுந்தன.
இந்நிலையில் நித்திரவிளையில் இருந்து நடைக்காவு செல்லும் சாலையில் நம்பாளி பகுதியில் சாலையின் ஓரம் இருந்த வீட்டில் நின்றிருந்த ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்து சாலையின் குறுக்கே கிடந்தது.
இந்த மரம் விழுந்து மின்கம்பிகள் இழுத்த வேகத்தில் சாலையின் ஓரம் துருப்பிடித்த நிலையில் நின்றிருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று உடைந்து விழுந்தது. மின்கம்பிகள் சாலையின் நடுவே தொங்கின, டிரான்ஸ்பார்மர் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லோடு ஆட்டோவின் மீது விழுந்தத்தில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த வேளையில் வாகனங்களோ ஆட்களோ இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் வந்து போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த மின்கம்பிகள் மற்றும் மரத்தினை அகற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu