குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி: எஸ்பி துவக்கி வைப்பு

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி: எஸ்பி துவக்கி வைப்பு
X

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது காவலர்கள் மத்தியில் தனது பயிற்சி பெற்ற அனுபவத்தை கூறி பேசிய அவர் காவலர் பணி என்பது உன்னத பணி எனவே பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என கூறினார். மேலும் பயிற்சியில் கஷ்டங்கள் இருக்கும், அதனை மகிழ்ச்சியோடு ஏற்று செய்ய வேண்டும் என்றும், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தார் காவல்துறையை அணுகும்போது காவலர்கள் எப்படி உங்களை நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல் நீங்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மாதம்தோறும் குறைதீர்ப்பு முகாம் வைத்து குறைகளை தீர்த்து வைப்பதாகவும், சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் பெற்று தர வேண்டும் என்று அறிவுரை வழங்கி அவர்களை வாழ்த்தினார். இன்று தொடங்கி உள்ள பயிற்சி வகுப்பு மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 காவலர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story