இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறிய புது மாப்பிள்ளை பலி.

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறிய புது மாப்பிள்ளை பலி.
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் இருசக்கர வாகனத்தில் சென்று நிலை தடுமாறிய புது மாப்பிள்ளை பலியானதால் சோகம்.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த அருள் கிங்ஸ்டன் இவரது மகன் லிவிங்ஸ்டன் (21). இவருக்கு திருமணமாகி ஒன்னரை மாதமே ஆகி உள்ளது. இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஞானம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை வழியாக சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த லிவிங்ஸ்டன் தலையில் படுகாயமடைந்து அரை மணி நேரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லிவிங்ஸ்டன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story