சீரற்ற சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்; பொதுமக்கள் பாராட்டு

சீரற்ற சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீசார்; பொதுமக்கள் பாராட்டு
X

குமரியில் பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமான சாலையை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.

குமரியில் பல்வேறு பகுதிகளில் குண்டும், குழியுமான சாலையை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திப்பதோடு இரவு நேரங்களில் தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் உதவியுடன் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாலைகளை போக்குவரத்து போலீசார் சீர் செய்தனர்.

அதன்படி குண்டும் குழியுமான சாலையை கல் மற்றும் மண்ணால் நிரப்பி சரி செய்தனர். காவல்துறையினரின் இத்தகைய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!