/* */

முழு ஊரடங்கு: வெறிச்சோடி காணப்பட்ட குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள்

தமிழக அரசின் முழு ஊரடங்கு தடை காரணமாக குமரியில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன

HIGHLIGHTS

முழு ஊரடங்கு: வெறிச்சோடி காணப்பட்ட குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள்
X

முழு ஊரடங்கால் வெறிச்சோடிக்காணப்பட்ட கன்னியாகுமரி கடற்கடை

கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் சுற்றுலா தளங்களை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் உள்ள கடற்கரை, பூங்கா, சூரிய காட்சி கோபுரம் உட்பட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.மேலும் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் சொகுசு படகு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், சங்குதுறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்லவும் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கன்னியாகுமரி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 9 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை