விதண்டா வாதத்துக்கு மருந்து கிடையாது - பொன்னார்
கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் நாகர்கோவில் தொகுதிக்குபட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
முன்னதாக அவர்கள் வடசேரி சோளராஜா கோயிலில் தரிசனத்திற்கு பின்னர் வடசேரி, ஓழுங்கினசேரி, கோதைகிராமம் போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். இராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி வரும்போது சரக்கு பெட்டக மாற்றுமுனையம் சம்மந்தமாக ஏதாவது அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, வாதத்துக்கு மருந்து உண்டு எனவும், விதண்டவாதத்துக்கு மருந்து இல்லை என குறிப்பிட்டார்.
மேலும் காங்கிரஸ் கட்சி 2019 ஆண்டு எப்படி பொய்சொல்லி வெற்றி பெற்றார்களோ, அதைப்போன்று வெற்றியை இந்த தேர்தலிலும் மீண்டும் பெறவேண்டும் என நினைக்கிறார்கள்.
ஆனால் இந்த முறை அவர்களுக்கு புதிய ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை. புதிய சாதனைகள் எதுவும் சொல்லமுடியவில்லை. ஆகையால் பழைய ஆயுதம் துருபிடித்த ஆயுதத்தை எடுத்து பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது துறைமுக விஷயத்தில் முதல்வர் சொன்ன விஷயங்களும், நான் சொன்ன விஷயங்களும் எல்லாருக்கும் தெரியும் இதற்கு மேல் விளக்கம் எதுவும் கொடுக்கமுடியாது எனவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu