வாழும் கலை அமைப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கியது

வாழும் கலை அமைப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கியது
X
குமரி அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் - வாழும் கலை அமைப்பு வழங்கியது.

சர்வதேச வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் வாழும் கலையின் சார்பு அமைப்பின் மற்றும் ஒரு அமைப்பான மனித நேய பண்பாட்டிற்கான சர்வதேச அமைப்பு (International Association for Human Values) ஏற்பாட்டில் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

இதனை மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் திருவாசகமணி பெற்று கொண்டார். இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இதுவரை 711 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 6319 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 20 லட்சம் முக கவசங்கள், 100 வென்டிலேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings