உக்ரைன் நாட்டில் தவித்துவரும் தன் மகள்களை காப்பாற்ற தந்தை கோரிக்கை
உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வருவதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது, அங்குள்ள இந்திய மாணவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த நிலையில் அவர்களை மீட்க வேண்டும் என்று அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி அருகே குண்டல் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் நிலையில் மாணவிகளின் தந்தை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தன் பிள்ளைகளை மீட்டு கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.
கோரிக்கை மனுவில், தனது மகள் கிரேஸ்ஸ்ட்லின் மற்றும் அபர்னா ஸ்வீட்டி ஆகியோர் உக்ரைன் நாட்டில் வினிசியா பகுதியில் மருத்துவ படிப்பு ஆறாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதை அடுத்து எனது மகள் அவர்கள் தோழிகளுடன் உக்கரைனில் இருந்து புறப்பட்டு ருமேனியா பகுதிக்கு வந்துள்ளார். ருமேனியா எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தவித்து வருகிறார், எல்லை மூடப்பட்டுள்ளதால் அவர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது.
எனது மகளுடன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில மருத்துவ மாணவிகளும் தவித்து வருகிறார்கள், இன்று காலையிலும் ருமேனியாவில் இருந்து எனது மகள் என்னிடம் பேசினார். எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக கூறினார், எனவே எனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu