போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டி, பதிலடி கொடுத்த பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த, சொகுசு காரில் இருந்த குடும்பத்தினர் மாஸ்க் அணியாமல் வந்ததை கண்டு தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து அவர்களுக்கு நோய் தொற்றின் தாக்கம் குறித்து அறிவுரை வழங்கிய போலீசார் மாஸ்க் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாகன ஓட்டி பலர் அறியாமல் இருக்கும் நிலையில் தன்னை மட்டும் மாஸ்க் அணிய சொல்வதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பியதோடு, நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் வாகன ஓட்டியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்க் அணியவில்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து தான் வைத்திருந்த மாஸ்கை அணிந்து வாகன ஒட்டி வாகனத்தை எடுத்து சென்றார்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மாஸ்க் அணிவது தன்னை மட்டும் அல்ல தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு இன்றி வருவதோடு தான் செய்யும் தவறை நியாயப்படுத்தி பேசிய நபருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu