விஜிலென்ஸ் ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - தளவாய் சுந்தரம் கண்டனம்

விஜிலென்ஸ் ரெய்டு  அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - தளவாய் சுந்தரம் கண்டனம்
X

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேட்டியின் போது.

கே.பி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் விஜிலென்ஸ் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும் கே.பி அன்பழகன் அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் கல்வி துறையில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன, ஏராளமான அரசு கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு ஏழைகளும் உயர் கல்வி என்ற கனியை பறிக்க செய்தவர் கே.பி அன்பழகன், தற்போது திமுக அரசு அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் விஜிலென்ஸ் துறையை ஏவி விட்டு சோதனை நடத்தி உள்ளது.

இது திமுகாவிற்கு புதிதல்ல, அம்மா காலம் முதல் இந்த அடக்கு முறையை எதிர்கொண்டு அதிமுக வெற்றி பெற்றுள்ளது, கடந்த 8 மாதத்தில் திமுக அரசு செய்த மக்கள் விரோத செயல்களையும், பொங்கல் தொகுப்பு ஊழலையும் மறைக்கவே முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது திமுக மட்டும் தான், தான் செய்த தவறை மறைக்க திமுக நாடகம் ஆடுகிறது, ஆனால் இந்த நாடகம் மக்களிடையே எடுபடாது. இன்று திமுக செய்யும் மாபாதக செயல் அவர்களுக்கும் திருப்பி கிடைக்கும், திமுக தனது அரசியல் காழ்புணர்ச்சியை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
Will AI Replace Web Developers