கோவில்களை குறி வைத்து கொள்ளை: ஒருவர் கைது, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கொள்ளையடித்த நபரை கைது செய்து 8.6 லட்சம் மதிப்புள்ள பாெருட்களை பாேலீசார் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றாவாளிகளை விரைவாக பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி குளச்சல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர்கள் ஜாண்போஸ்கோ, சரவணகுமார், சுந்தர்மூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதனிடையே குற்றவாளிகள் குறித்த தீவிர தேடுதலில் ரகசிய தகவல் அடிப்படையில் 04.09.2021 அன்று குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் வைத்து சரல் பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜ் (33) என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்ததில் அவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் 1 வழக்கும் ஆக மொத்தம் 20 வழக்குகளில் அனிஷ்ராஜ்க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடமிருந்து 600 கிலோ வெண்கல பொருள்களும், சுமார் 60,000/- ரூபாய், மற்றும் 16 கிராம் தங்க நகைகளும் ஆக மொத்தம் 8,60,000/- ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றாவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu