குமரி: மதுபோதையில் சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது

குமரி: மதுபோதையில்  சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது
X
குமரியில், கோவிலில் இருந்த சாமி சிலையை போதையில் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் 40 வயதான ஆதிகிருஷ்ணன். இவருடைய உறவினர் சிவபாலன். இவர் தற்போது ஓசூர், சிவமங்கலம் அக்கோண்டா பகுதியில் வசித்து வருகிறார்.

தற்போது ஊருக்கு வந்திருந்த சிவபாலன், ஆதிகிருஷ்ணனுக்கு சொந்தமான கோவிலில் உள்ள ஒரு சுவாமி சிலையை, மதுபோதையில் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஆதிகிருஷ்ணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது, அவரை சிவபாலன் தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .

இது குறித்து, ஆதிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நேசமணிநகர் போலீசார், சிவபாலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!