மனுஷன் எல்லாரும் ஒண்ணுதான் - பயிற்சி காவலருடன் வரிசையில் நின்று சாப்பிட்ட காவல் கண்காணிப்பாளர்

மனுஷன் எல்லாரும் ஒண்ணுதான் - பயிற்சி காவலருடன் வரிசையில் நின்று சாப்பிட்ட காவல் கண்காணிப்பாளர்
X
மனுஷன் எல்லாரும் ஒண்ணுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பயிற்சி காவலருடன் வரிசையில் நின்று உணவு சாப்பிட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் நேரில் ஆய்வு செய்தார், அப்போது தனது பயிற்சி அனுபவத்தை கூறி பேசிய அவர் காவலர் பணி என்பது உன்னத பணி எனவே பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும், பயிற்சியில் கஷ்டங்கள் இருக்கும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தார் காவல்துறையை அணுகும்போது காவலர்கள் எப்படி உங்களை நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல் நீங்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மாதம்தோறும் குறைதீர்ப்பு முகாம் வைத்து குறைகளை தீர்த்து வைப்பதாகவும், சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் பெற்று தர வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் . மேலும் பயிற்சி காவலர்களுடன் இணைந்து காலை உணவினை வரிசையில் நின்று அருந்தினார். பயிற்சி வகுப்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 காவலர்கள் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது