சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா: பக்தர்கள் பரவசம்
சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில் திருவிழாவில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மற்றும் பழமை வாய்ந்த கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறும், அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20- ந் தேதி வரை நடக்கிறது.
இதனிடையே இன்று அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் போது வானில் கருடன் வட்டமிட்டு கொண்டு இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu