லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம்: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்

லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம்: உறுதிமொழி எடுத்த மாணவர்கள்
X

 கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில்,  நேர்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என கூறி குமரியில் நேர்மைக்கான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர்.

சமூகத்தில் மக்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறி உள்ள லஞ்சத்தை ஒழிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், லஞ்சம் என்பது குறைந்தபாடில்லை. வசதி படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதால், ஏழைகளுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய பல்வேறு பலன்களும் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

லஞ்சத்தை முழுமையாக தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதரும் லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற கட்டுப்பாட்டை எடுத்து கொண்டால் மட்டுமே ஊழலற்ற பாரதம் அமையும் என்பதே உண்மை.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில், நேர்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் கொடுக்க மாட்டோம் என கூறி லஞ்சம் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!