நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை
X

நாகர்கோவிலில் நீட் தேர்வு மையத்திற்குள் செல்லும் மாணவிகள்.

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 மையங்களில் 4,142 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 3,927 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் நாகர்கோவில், பார்வதிபுரம் உள்ளிட்ட 7 மையங்களிலும் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் உடல் வெப்ப நிலை உள்ளிட்ட கடும் சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே மாணவிகளுக்கு ஷால், கம்மல் செயின் போன்றவைகளை அணியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் தேர்வு மையம் வந்த மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தலைமுடியை பின்னக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது தேர்வு எழுதுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கட்டுப்பாடுகளும் சோதனைகளும் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!