முதுகு தண்டுவட தினம்: குமரியில் மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு

முதுகு தண்டுவட தினம்:  குமரியில் மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு
X

நாகர்கோவில் முதுகு தண்டுவட பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மாற்று திறனாளிகளானவர்கள் ஒன்று கூடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர்.

முதுகு தண்டுவட பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் மாற்று திறனாளிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அவசர பணி, கவனம் இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் பலர் முதுகு தண்டுவட பிரச்சனையால் அவதியுற்று வருவதோடு தண்டு வட பிரச்சனை தீவிரம் ஆகி மாற்று திறனாளியாகவும் ஆகின்றனர்.

இந்நிலையில் முதுகு தண்டுவட தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதுகு தண்டுவட பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மாற்று திறனாளிகளான ஆனவர்கள் ஒன்று கூடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர்.

அதன்படி வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம், சீட் பெல்ட் அவசியம், மித வேகம் மிக நன்று, கவனம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்த மாற்று திறனாளிகள் தங்களை போன்று வேறுயாரும் பாதிப்படைய கூடாது என்பதால் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture