ஆயுதப்படை மைதானத்தில் சிசிடிவி கேமரா - குமரி எஸ்.பி திறந்து வைத்தார்

ஆயுதப்படை மைதானத்தில் சிசிடிவி கேமரா - குமரி எஸ்.பி திறந்து வைத்தார்
X

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், சிசிடிவி கேமரா செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார்.

குமரி ஆயுதப்படை மைதானத்தில் 9.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா செயல்பாட்டை எஸ்.பி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் ரூ.9.5 லட்சம் செலவில் 35 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயுதப்படை மைதானத்தின் நுழைவுவாயிலில் வாகனங்களையும் வாகனங்களின் பதிவு எண்களையும் துல்லியமாக கண்காணிக்கும் விதமாக 2 அதி நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இந்த சிசிடிவி கேமரா செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார். இதன் மூலம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆயுத கிடங்குக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்பதோடு, வெளிநபர்கள் வருகையையும் கண்காணிக்க முடியும் என குமரி காவல்துறை தெரிவித்து உள்ளது.

Tags

Next Story