நாகர்கோவிலில் சிலம்பம் ஆடி மாநில போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர்

நாகர்கோவிலில் சிலம்பம் ஆடி மாநில போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர்
X

சிலம்பம் அடிமுறை போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

நாகர்கோவிலில் சிலம்பம் ஆடி மாநில அளவிலான அடி முறை போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் லெமோரியா தற்காப்பு கலை என்ற அமைப்பின் மூலம் தமிழக அளவிலான இரண்டு நாள் அடிமுறை சிலம்பம் போட்டி இன்று தொடங்கியது.

இதனை தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.முன்னதாக போட்டியினை தொடங்கி வைத்த அவர் சிலம்பம் ஆடி அங்கு உள்ள அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட தற்காப்புக்கலை பயின்ற சின்னஞ்சிறு சிறுமிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே காலத்தால் அழிந்து போன அடிமுறை, தற்காப்பு கலையை சிறுவர் சிறுமிகளும், இளைய தலைமுறையினரும் செய்து காட்டியது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இது போன்ற விளையாட்டு மற்றும் பயிற்சி அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்ததாக அங்குள்ள பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself