பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸார் கையெழுத்தியக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸார் கையெழுத்தியக்கம்
X
பெட்ரோல் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கையெழுத்து இயக்கம் - காங்கிரஸ் நடத்தியது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வரும் நிலையில், இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.அப்போது கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீள முடியாத நிலையில் இருக்கும் மக்கள் மீது விலை சுமையை ஏற்றி வரும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைக்க முன் வந்து உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!