தொடர் குற்ற செயல் - 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

தொடர் குற்ற செயல் - 3 வாலிபர்கள்  குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாஞ்சான்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சூரியா என்ற தளபதி சூரியா, கோட்டார் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த கிஷோர் குமார், ஆசாரிபள்ளம் குருகுலம் சாலையை சேர்ந்த ஆல்டோ மைகேல் டோனிக் ஆகிய 3 பேர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் மீது நாகர்கோவில், சுசீந்திரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் போக்ஸோ உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவுப்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 22 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!