ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரேஷன் கடையில் பொருட்கள் சுருட்டல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

பைல் படம்

குமரியில் ரேஷன் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கி மோசடியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டுர்ணிமடம் பகுதியில் அமைந்துள்ள கடையன்விளை நியாய விலை கடையில் மண்ணெண்ணேய் உட்பட ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நூதன முறையில் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த கடை குறித்து புகார்கள் வந்த நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் மோசடி அரங்கேறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்கி செல்ல குடும்ப அட்டைதாரர்கள் வருவதை விட வியாபாரிகளின் வருகையே அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா