குமரியில் கனமழையால் சாலைகள் சேதம்: அத்தியாவசிய பாெருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

குமரியில் கனமழையால் சாலைகள் சேதம்: அத்தியாவசிய பாெருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி
X

குமரியில் கனமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பாேக்குவரத்து முற்றிலம் முடக்கம்.

குமரியில் கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு 30 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் அணைகளில் இருந்து பெருமளவில் நீர் வெளியேற்றப்படுவதால் மாவட்டத்தில் உள்ள குளங்கள் கால்வாய்கள் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவானது.

இதன் காரணமாக சகாயநகர், வெள்ளமடம், தேரூர், குலசேகரன்புதூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்ல முடியாத அளவுக்கு பெரிய பள்ளமாக காட்சியளிக்கும் இந்த சாலை வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலையில் அந்த கிராமங்களுக்கான பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.

கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை, காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காததால் அந்த கிராம மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா