குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்
குமரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி சென்ற 12 லாரிகள் சிக்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரங்களை ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வந்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.
இதனிடையே குமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னா தலைமையில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற 12 கனரக வாகனங்கள் சிக்கியது. இந்த கனரக வாகனங்கள் அனைத்தும் வருவாய்த்துறை அலுவலகம் கொண்டு வரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இந்த சோதனை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu