கொரோனா நிவாரண நிதி அளித்த ஓய்வு பெற்ற போலீசார்

கொரோனா நிவாரண நிதி அளித்த ஓய்வு பெற்ற போலீசார்
X
கொரோனா நிவாரண நிதியாக 30000 ரூபாய் அளித்த ஓய்வு பெற்ற போலீசார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து இருந்த நிலையில் அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று பல்வேறு அமைப்பினர் பிரபலங்கள் தொழிலதிபர்கள் தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தொழில் அதிபர்கள், தனியார் நிறுவனத்தினர் உட்பட பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதியாக 30000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை ஓய்வுபெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பென்சிகர் தலைமையில் அந்த அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!