மது குடிக்காமல் தவித்து, மதுப்பிரியர்கள் மாற்று வழியை தேடி செல்கின்றனர்-குமரி காவல்துறை

மது குடிக்காமல் தவித்து, மதுப்பிரியர்கள் மாற்று வழியை தேடி செல்கின்றனர்-குமரி காவல்துறை
X
மதுவிற்கு மாற்றாக ஆல்கஹால் மருந்துகளை விற்க கட்டுப்பாடு - குமரி காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் மது பிரியர்கள் குடிக்காமல் தவித்து வரும் நிலையில் மது பிரியர்கள் மாற்று வழியை தேடி செல்கின்றனர்.

அதன் படி மதுப்பிரியர்கள் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகள் கெட்டுப்போகமால் இருக்க ஆல்கஹால் சேர்ந்து இருக்கும் மருந்துகளையும், சேனிடேசர் போன்ற திரவங்களை பயன்படுத்தி வருவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்தது.

மது கிடைக்காமல் இது போன்ற திரவங்களை அருந்தி ஒரு சிலர் இறந்த காரணத்தினால் மருந்தகங்களில் இது போன்ற மருந்துகளை விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் இது போன்ற மருந்துகளை கேட்டு வருபவர்களுக்கு டாக்டரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து வினியோகம் செய்ய வேண்டும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் ஒவ்வொரு காவல் நிலைய எல்கைக்குள் இருக்கும் மருந்தக உரிமையாளர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!