குடியரசு தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
X

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் சுற்றுலா தலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குடியரசு தினத்தை முன்னிட்டு குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நாட்டின் 63 ஆவது குடியரசு தினம் இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள வானுயர் திருவள்ளுவர் சிலை சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு பாதை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!