கன்னியாகுமரியில் சுற்றுலா சொகுசு படகுகள் சீரமைப்பு பணி தொடக்கம்

கன்னியாகுமரியில் சுற்றுலா சொகுசு படகுகள் சீரமைப்பு பணி தொடக்கம்
X
கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் குமரியில் சுற்றுலா சொகுசு படகுகள் சீரமைப்பு பணி தொடக்கம்.

தமிழ்நாடு கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகு சேவையில் எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை மற்றும் விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரண்டு சொகுசு படகுகளும் வாங்கப்பட்டு படகுதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மே மாதம் 8-ம் தேதி முதல் படகுசேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடுகள் அமுலில் உள்ளது.

இந்நிலையில் சுற்றுலாதலங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கன்னியாகுமரி படகுதுறையில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக படகுகளை தயார் நிலையில் இருக்கும் செய்யும் பணி தொடங்கியது, இதனையடுத்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு படகுகள் அங்கிருந்து கடல் மார்க்கமாக சின்னமுட்டம் துறைமுகத்தில் படகு கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது இந்த படகுளை சீரமைக்க 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!