குமரி: சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்திய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

குமரி: சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்திய  1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள். 

குமரியில் இருந்து சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் ரேஷன் அரிசிக்கு கேரளாவில் கடும் கிராக்கி நிலவி வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் சமூக விரோத கும்பல், தமிழகத்திலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி சென்று விற்பனை செய்து அதிக லாபம் பார்த்து வருகின்றனர்.

இதற்காக காவல்துறை, வருவாய்த்துறை, தனிப்படையினர் பல்வேறு குழுக்களாக சோதனையில் ஈடுபட்டாலும் ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், குமரியில் இருந்து சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசியை, அதிகாரிகள் நடத்திய வாகனச்சோதனையின் போது பிடித்தனர். மேலும் அரிசியுடன் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai business process automation