பையில் அரிய வகை மண்ணுளி பாம்பு: போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோட்டம்

பையில் அரிய வகை மண்ணுளி பாம்பு: போலீசாரை கண்டதும் இருவர் தப்பியோட்டம்
X

கைப்பற்றப்பட்ட மண்ணுளி பாம்பு.

குமரியில் பேக்குக்குள் உயிருடன் இருந்த மண்ணுளி பாம்பை கொண்டு வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து செல்லும்போது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர்.ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனம் மற்றும் பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தையும் பையும் கைப்பற்றிய ஆசாரிபள்ளம் போலீசார், பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அரியவகை மண்ணுளிப்பாம்பு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்படி சம்பவ இடம் வந்த வனதுறையினரிடம் மண்ணுளிப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare