குமரியில் நேரு யுவகேந்திரம் சார்பில் மழை நீர் சேகரிப்பு ஓவிய போட்டி

குமரியில் நேரு யுவகேந்திரம் சார்பில் மழை நீர் சேகரிப்பு ஓவிய போட்டி
X

குமரியில் நேரு யுவகேந்திரம் சார்பில் மழைநீர் சேகரிப்பு என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

குமரியில் நடைபெற்ற மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து தர்ம பேரவை அறக்கட்டளை அமைப்பின் சார்பில் பல்வேறு சேவா பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச கல்வி உபகரணங்கள், இந்தி வகுப்புகள், பேரிடர் கால நிவாரண பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அமைப்பின் சார்பில் நடைபெறும் இலவச ஹிந்தி மற்றும் பொது அறிவு பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு நேரு யுவகேந்திரம் சார்பில் மழைநீர் சேகரிப்பு என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

அதன்படி மழைநீர் சேகரிப்பில் அவசியம், பயன் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்து அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

85 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹிந்து தர்ம பேரவை தலைவர் மொட்டவிளை ரவிகுமார் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பயிற்சி ஆசிரியை உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!