சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி
சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் திருவிழா முக்கிய நிகழ்வான மக்கள்மார் சந்திப்பு விமரிசையாக நடைபெற்றது.
தென் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் காணப்படும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெரும் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 3 ஆம் நாள் நடைபெறும் முக்கிய நிகழ்வான தகப்பனுக்கு நடக்கும் திருவிழாவில் பங்கேற்கும் வகையில் வந்த வலம்புரி விநாயகர், குமாரகோவில் முருகர், மருங்கூர் முருகர் ஆகியோர் தங்களது தாய் தந்தையை வணங்கி விழாவில் பங்கேற்கும் நிகழ்ச்சியான மக்கள் மார் சந்திப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதன்படி புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர் மற்றும் விஷ்ணு, அம்பாள் ஆகியோரை விநாயகரும், சுப்பிரமணியரும் 3 முறை சுற்றி வலம் வந்து ஆசி பெற்றதோடு இருபுறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த 'மக்கள் மார் சந்திப்பு' நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க கண்டு ரசித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu