குமரியில் பெய்து வரும் கனமழை :பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி

குமரியில் பெய்து வரும்  கனமழை :பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி
X
தற்போது பெய்து வரும் பரவலான மழையால் குடிநீர் தேவை, விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, இரணியல், மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் பரவலான மழை பெய்தது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது பெய்து வரும் பரவலான மழையால் குடிநீர் தேவை நிறைவேறுவதோடு விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story