குமரியில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

குமரியில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
X

கோப்பு படம் 

குமரியில், டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதோடு சாலைகள் மோசமாக இருப்பதால் தண்ணீர் பெருமளவில் தேங்கி, கொசு உற்பத்தி ஆகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள், பல்வேறு பகுதிகளுக்கு குழுக்களாக சென்று, வீடுகள், வணிக நிறுவனங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதா, அங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகிறது என்பதை கண்காணித்து வருகின்றனர். மேலும், மருந்து தெளிக்கும் பணிகளையும், புகை மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை எதையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags

Next Story