குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்படட புகையிலை 

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார் மற்றும் விஜயன் ஆகியோர் அப்டா மார்க்கெட் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது, கடையின் பின் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெற்றிலைக்கு வைக்கும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மொத்த எடை 2 டன் என்ற நிலையில் அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து கடை உரிமையாளரான பறக்கையை சேர்ந்த முகமது ரபிக் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!