பெண் இன்ஜினியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

பெண் இன்ஜினியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

குமரியில் பெண் இன்ஜினியர் திடீர் மாயம் ஆன நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கீழ பால்கிணற்றான்விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் 25 வயதான வினோதினி. பி.இ., படித்துவிட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலுக்கு செல்வதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் வினோதினியை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார், புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சாய்லட்சுமி, உதவி ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!