சட்டவிரோதமாக மது விற்றவர் கைது.

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது.
X
அரசு மதுபான கடைகளில் இருந்து மது வாங்கி அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜரெத்தினம் தலைமையிலான போலீசார் கழுவன்திட்டை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வாணியூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25) என்பதும், சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!