கன்னியாகுமரியில் கூலிப்படையினர் 5 பேரை கைது செய்தது போலீஸ்

கன்னியாகுமரியில் கூலிப்படையினர் 5 பேரை கைது செய்தது போலீஸ்
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்த கூலிப்படையினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடை தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கஞ்சா விற்பனை சட்ட விரோத மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையில் போலீசார் தக்கலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் 5 நபர்கள் கூடி இருந்தனர், அவர்களை போலீசார் நெருங்கிய போது போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களை விரட்டி சென்று பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர், விசாரணையில் அவர்கள் தாசிம், முகமது மைதீன், நாசர், சுரேஷ், ரெனி ஆன்டனி என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் அவர்கள் அனைவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

உடனே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்ததோடு. அவர்களிடமிருந்து 5 அரிவாள்கள் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி அனைவரையும் சிறையில் அடைத்தனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!